Homeஉள்நாடுசெம்மணியில் மேலும் 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணியில் மேலும் 3 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது புதிதாக மூன்று மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று மூன்று மனித எலும்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மனித எலும்புத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை 118 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை மொத்தமாக 105 மனித எலும்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புத் தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் ஸ்கேன் பரிசோதனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular