Homeஉள்நாடுசெம்மணியில் 99 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 99 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின் போது புதிதாக ஏழு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 24ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது ஏழு மனித என்புத் தொகுதிகள் புதிதாகஅடையாளம் காணப்பட்டன. 3 மனிதஎன்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 111 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்இதுவரை 99 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட் டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக் குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிஞா. ரனிதா மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலை மையிலான குழுவினரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மற்றும் கலைப்பீட தொல்லியல் துறை மாணவர்களும் நேரு அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular