Homeஉள்நாடுசர்வதேச விசாரணையே தமிழர்களின் எதிர்பார்ப்பு!

சர்வதேச விசாரணையே தமிழர்களின் எதிர்பார்ப்பு!

வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை மற்றும் அடிப்படையில்லாத அநீதிகளுக்கு சர்வதேச நீதி பொறிமுறைகள் மூலம் நீதியான தீர்வை சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுச் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் நேற்று முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ வடக்கு, கிழக்கில் மனித புதைகுழிகளில் இருந்து
அனேகமாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடையதாகவும் இருக்கின்றன.

கொக்கு தொடுவாயில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட 51 மனித எலும்புக் கூடுகள் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்டவையாகவும் அடைத்து மறைக்கப்பட்டவையாகவும் மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொகுதிகளாக சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரை பலர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்த இனப்படுகொலை குறித்து அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புதல் அளிக்க மறுப்பதும், தமிழர் சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சமுதாயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வதேச நீதி மற்றும் மனித உரிமை அமைப்புகளை தமிழர்கள் எதிர்பார்க்கின்றர்.” எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular