Homeஉள்நாடுபழிவாங்கலை மட்டுமே செய்கிறது அரசு!

பழிவாங்கலை மட்டுமே செய்கிறது அரசு!

தமது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பழிவாங்கும் படத்தை ஆரம்பித்துள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றி கதைப்பதற்கு ஒன்றுமில்லை. மக்களின் பிரச்சினைகள் மூடிமறைக்கப்படுகின்றன. பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. மறுபுறத்தில் தமது இயலாமையை மூடிமறைப்பதற்காக அரச அதிகாரிகள் உட்பட மக்கள்வரை ஒடுக்கப்படுகின்றனர்.

அரிசி மாபியாக்களுக்கு முடிவு கட்டப்படும் எனக்கூறியே தேசிய மக்கள் சக்தியினர் ஆட்சிக்கு வந்தனர். ஆனால் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. இதுகூட விவசாயிகளை பழிவாங்கும் நடவடிக்கையாகும். கண்காட்சிகள் நடத்துவதன்மூலம் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular