Homeஉள்நாடுநெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஜூலை 25 வரை மறியல்

நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு ஜூலை 25 வரை மறியல்

இலங்கைக் கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

நேற்று அதிகாலை யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் எழுவரும் ஊர்காவற்றுறை நீதிவான் வாசஸ்தலத்தில்  ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிவான் நளினி சுபாஸ்கரன் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்

இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 படகுகளுடன் 181 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular