Homeஉள்நாடுஅமெரிக்காவின் வரியால் ஆபத்து! ரணில் சுட்டிக்காட்டு!

அமெரிக்காவின் வரியால் ஆபத்து! ரணில் சுட்டிக்காட்டு!

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்துறை நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்தியாவுடன் கைச்சாத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆடை தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட தொழிலதிபர்களை சந்தித்த போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

‘ இலங்கையின் பொருளாதாரம் ஆடைகள் மற்றும் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதால் கிடைக்கும் அந்நிய செலாவணியை அடிப்படையாகக் கொண்டது. இவ்வாறு பொருளாதாரத்தை வெறுமனே ஆடை ஏற்றுமதியால் மாத்திரம் இயக்க முடியும் என்று எண்ணினால் அது தவறு.

அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டால், அந்தப் பக்கத்திலிருந்தும் நாம் பாதிக்கப்படுவோம்.

இந்நிலையில் இந்தியாவுடன் தேவையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால், அந்தப் பக்கத்திலிருந்தும் நிவாரணத்தை எதிர்பார்க்க முடியாது. நான் கூறியது போல் செயற்பட்டிருந்தால் இந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular