Homeஉள்நாடுஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இவ்வாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அசாத் மௌலானா என்ற நபரை பிரான்ஸில் இருந்து நாட்டுக்கு அழைத்துவந்து விசாரிக்க முடியாதா? அல்லது இங்கிருந்து அதிகாரிகள் குழுவொன்றை விசாரணைக்கு அனுப்ப முடியாதா? இதற்குரிய நடவடிக்கை ஏன் இடம்பெறவில்லை? எதற்காக தாமதம்? யாரை பாதுகாக்க அரசாங்கம் முற்படுகின்றது?

சாரா ஜஸ்மின் தொடர்பில் மூன்று டி.என்.ஏ. மாதிரிகள் இருந்தன. ஒற்றுதான் உறுதியானது. அதை நாம் ஏற்கமாட்டோம். ஏன் அரசாங்கத்தால் ஏஎன்ஏ பரிசோதனையை மீண்டும் நடத்த முடியாமல் உள்ளது?

நீதிக்காக சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்;. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular