Homeஉள்நாடு14 நாடுகளுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் கைச்சாத்து!

14 நாடுகளுக்கு கூடுதல் வரி: ட்ரம்ப் கைச்சாத்து!

 

ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார்.

இதற்கு பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10 சதவீதத்தை அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இறுதியானது.

90 நாட்கள் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், ஒப்பந்தம் நிறைவேறாத 14 நாடுகளுக்கான கூடுதல் வரி விகிதம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பதற்கான ஆவணத்தில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி, லாவோஸ், மியன்மார் ஆகிய நாடுகளுக்கு 40 சதவீதம் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.

தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு 36 சதவீதமும், பங்களாதேஷ், செர்பியாவுக்கு 35 சதவீதமும், இந்தோனேசியா, தென் ஆப்ரிக்கா, போஸ்னியா ரூ ஹெர்ஜெகோவினா ஆகிய நாடுகளுக்கு 30 சதவீத மும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியா, துனிஷியா, ஜப்பான், தென் கொரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு ஜூலை 9-ல் இருந்து ஆகஸ்ட் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular