Homeஉலகம்ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

ஈரானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை!

சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

ஈரானின் இந்த செயல் மேற்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு, கொஞ்சம் கூட தாமதிக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் டாமி ப்ரூஸ் கருத்து வெளியிடுகையில்,

‘ ஈரான் தனது போக்கை மாற்றி, அமைதி மற்றும் செழிப்பின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் இந்த நேரத்தில், அணுசக்தி முகமையுடனான ஒத்துழைப்பை நிறுத்திக்கொள்வது ஏற்க முடியாதது. ஈரான் மேலும் தாமதமின்றி, முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

அணுகுண்டுகள் இல்லாத ஒரே நாடாக, 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்த நாடு ஈரான் தான். ஈரான் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பு ஒப்பந்தத்தின் கீழ் தேவைப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஈரான் முழுமையாக பின்பற்ற வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular