Homeஉள்நாடுஅரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் கச்சத்தீவு!

அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படும் கச்சத்தீவு!

“கச்சத்தீவு விவகாரத்தை இந்திய தரப்பு அரசியல் ஆயுதாக பயன்படுத்திவருகின்றது.” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

” கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அத்தீவில் தண்ணீர் இல்லை. அதுவொரு சாதாரண தீவாகும். தேவாலயமொன்று உள்ளது. வருடமொருமுறை இரு நாடுகளின் பக்தர்களும் வருவார்கள். அதேபோல அங்கு மீனவர்களை வளைகளையும் காயவைப்பார்கள்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும்வேளைதான் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் பேசுபொருளாக மாறும். அரசியல் இலாபம் தேடும் நோக்கிலேயே அது பற்றி பேசப்படுகின்றது.

அதேவேளை, இந்தியாவில் இருந்து நாளொன்றுக்கு 800 முதல் 900 வரையான ரோலர் படகுகள் வருகின்றன. இதன்மூலம் எமது கடல்வளம் நாசமாகிவருகின்றது. அந்திய செலாவணி இழப்பும் ஏற்படுகின்றது.” – என்றார் சரத் வீரசேகர.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular