Homeஉள்நாடுசெம்மணி புதைகுழியை மூடி மறைக்க இடமளியோம்!

செம்மணி புதைகுழியை மூடி மறைக்க இடமளியோம்!

“மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் கைவிடப்பட்டதைப் போல் செம்மணி மனிதப் புதைகுழியையும் மூடி மறைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந் திரன் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிகமுக்கிய பங்கை வகிக்கின்றன. உண்மை கண்டறியப்பட வேண்டுமானால் இந்த மனிதப் புதைகுழிகளைச் சரியான முறையில் ஆய்வு செய்தாலே பல விட யங்கள் அம்பலமாகும்.

அதனால்தான் ‘அணையா விளக்கு’ போராட்டம் அறிவிக்கப்படவுடனேயே அதற்கு ஆதரவு தெரிவித்து எமது கட்சியினரும் பெருந் தொகையாக கட்சிஅடையாளங்களைத் தவிர்த்து அதிலே கலந்துகொண்டார்கள்.

செம்மணி மனிதப் புதைகுழியும் வடக்கு, கிழக்கிலே அடையாளப்படுத் தப்பட்டுள்ள மற்றைய மனிதப் புதை குழிகளும் சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையோடு சரியான முறை யிலே அகழாய்வு செய்யப்பட வேண்டும்.விஞ்ஞான பூர்வமாக இது அணுகப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளைச் சர்வதேச நிறுவனங்களுடன் நாம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றோம்.”- எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular