Homeஉள்நாடுயாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம்

யாழ். செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக் கூட்டுத் தொகுதி அடையாளம்

யாழ். செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நேற்றுவரை 24 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம் மேலும் 3 மனித மனித எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனிதஎலும்புக் கூட்டு தொகுதியில், தாயொருவர் குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதியானது பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular