Homeஉள்நாடுமஸ்கெலியா பிரதேச சபை சுயேச்சைக்குழு வசம்: தவிசாளரானார் ராஜ்குமார்!

மஸ்கெலியா பிரதேச சபை சுயேச்சைக்குழு வசம்: தவிசாளரானார் ராஜ்குமார்!

 

 

மஸ்கெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று மதியம் 02.30 மணியளவில் மஸ்கெலியா அஷ்னிகா மண்டபத்தில் நடைபெற்றது.

சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் சுயேட்சை குழு சார்பாக கந்தையா ராஜ்குமார், தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆசிர்வாதம் எலிஸ்டன் ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர்.

தேசிய மக்கள் சக்தியில் அந்த சபைக்கு தெரிவான உறுப்பினர்கள் தமது தரப்பில் பெயரிடப்பட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு ஆணையாளரிடம் கோரினர்.

அதற்கு எதிராக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் தலைவர் தெரிவிக்கான வாக்கெடுப்பை திறந்த முறையில் நடத்துமாறு கோரினர்.

இரு தரப்பிலும் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையை கருத்தில் கொண்டு மத்திய மாகாண ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து, இந்த நிலைமையை விசேடமானதாக கருதி இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு தீர்மானித்தார்.

இதன்போது வாக்கெடுப்பை நடத்துவது தொடர்பில் அறிவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில், திறந்த வாக்கெடுப்பு நடத்துமாறு 10 வாக்குகளும், இரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதன்படி மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு திறந்த முறையில் நடத்தப்பட்டது.

இதில் 09 வாக்குகளை பெற்று சபையின் தலைவராக சுயேட்சை குழு உறுப்பினர் கந்தையா ராஜ்குமார் தெரிவு செய்யப்பட்டார்.

எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி சார்பாக ஆசிர்வாதம் எலிஸ்டன் 08 வாக்குகளே பெற்றுக்கொண்டார்.

இதே இந்த சபைக்கு உப தலைவர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக பரமசிவம் ராஜ்குமார் பெயர் முன்மொழியப்பட்டது.

அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பரமசிவம் ராஜ்குமார் சபையின் உப தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

1. மஸ்கெலியா பிரதேச சபை (உறுப்பினர்கள் 17)

• தேசிய மக்கள் சக்தி – 07

• ஐக்கிய மக்கள் சக்தி- 06

• சுயேட்சை குழு (01) – 02

• ஐக்கிய தேசியக் கட்சி – 02

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular