Homeஉலகம்மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் மரண தண்டனை!

மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் மரண தண்டனை!

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக, மேலும் மூன்று பேருக்கு ஈரான் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றியுள்ளது.

இஸ்ரேலின், மொசாட் உளவு அமைப்புக்கு உளவு பார்த்ததாக, 700க்கும் மேற்பட்டோரை கடந்த சில நாட்களில் ஈரான் கைது செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தலையீட்டால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. போர் முடிந்த பிறகு, நேற்று மூன்று பேரை ஈரான் துாக்கிலிட்டது.

மூவருக்கும், ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள உர்மியா சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, கடந்த பத்து நாட்களில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஆறு பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular