Homeஉள்நாடுதமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. உறுதி!

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஐ.நா. உறுதி!

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உறுதியாகவுள் ளது.”

– இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்தார் என்று தமிழ்த் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை ஆணையாளர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

நேற்று இரவு 7 மணியளவில் யாழ்ப்பா ணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்தச் சந்திப்பு நடை பெற்றது.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப் பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலில் வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணிஅபகரிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டவர் களுக்கான பொறுப்புக்கூறல், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி, இலங்கை யில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள், சர்வதேச நீதிப் பொறிமுறைகள் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டன என்று சந்திப்பில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular