Homeஉள்நாடுபயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்: அரசு உறுதி!

பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதங்களுக்குள் நீக்கம்: அரசு உறுதி!

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்குள் நீக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் பற்றிய எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை. நீதி அமைச்சர் தலைமையில் இவ்விவகாரத்தைக் கையாள்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத காலப்பகுதிக்குள் மேற்படி சட்டத்தை நீக்க முடியும்.

அதேபோல திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவதற்கு புதிய சட்டமொன்றும் அவசியம். அதற்குரிய ஏற்பாடும் இடம்பெற்றுவருகின்றது.

அரசியல் பழிவாங்கல் நோக்கில் தடுத்து வைத்தல் உள்ளிட்ட விடயங்கள் நீக்கப்படும். ஜனநாயக வழிமுறைகளுக்கமைய புதிய சட்டம் அமையும்.” – என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular