Homeஉள்நாடுஅர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் வலை!

அர்ஜுன மகேந்திரனுக்கு மீண்டும் வலை!

” மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வொன்றின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இது தொடர்பில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர் சிங்கப்பூர் பிரஜையென்பதால் சட்டரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சிற்சில தடங்கல்கள் உள்ளன. எனினும், இது பற்றி நாம் மீண்டும் அவதானம் செலுத்தியுள்ளோம். அவரை நாட்டுக்கு கொண்டுவருவதற்குள்ள இயலுமை தொடர்பில் கருத்துகள் பெறப்பட்டுவருகின்றது. விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

இராஜதந்திர மட்டத்தில் தற்போது முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. நாம் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. தேவையான சட்டங்கள் இயற்றப்பட்டுவருகின்றன. புதிய சட்டங்கள்மூலம், விசாரணைகளை புதிய கட்டத்துக்கு கொண்டுவர முடியும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular