HomeBig Storyபோர் நிறுத்தம்!

போர் நிறுத்தம்!

இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரான் அரச ஊடகமும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.

அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எனினும், ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்தன.

கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
அமெரிக்காவின் தலையீடு நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எனினும், போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் விடுத்த அறிவிப்பை ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆரம்பத்தில் மறுத்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular