Homeஉள்நாடுதமிழரசுக் கட்சிக்குள் கறுப்பாடுகள்! வெளியான பகீர் தகவல்

தமிழரசுக் கட்சிக்குள் கறுப்பாடுகள்! வெளியான பகீர் தகவல்

உள்ளுராட்சி சபைகளில் தலைமைப் பதவிக் கான இரகசிய வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படும் கறுப்பாடுகள் கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சி.வி. கே.சிவஞானம் தெரிவித்தார்.

“ வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவில் பல சதிகளுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வெற்றி கிடைத்திருக்கின்றது.

குறிப்பாக எங்கள் கட்சியினுடைய உறுப்பினர் ஒருவரே கட்சியினுடையதீர்மானத்துக்கு மாறாகக் கட்சியின் தவிசாளர் வேட்பாளரை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தமை ஏமாற்றத்துக்குரியது.

அவரை உடனடியாகக் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கானபணிப்புரையைக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனுக்கு விடுத்திருந் தேன். அதற்கமைய அந்த உறுப்பினர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

வேறு சபைகளிலும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் எங்களைத் தோற்கடித்தவர்கள் யார் என எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. பகிரங்க வாக்கெடுப்பில் கட்சியின்தீர்மானத்தை மீறி இருக்கின்றமைதவறான விடயமாகும்.

மேலும் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவிலும் சதி நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதனை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையில்நடுநிலைமை வகித்த உறுப்பினருக்கு எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகின் றதோ அதேபோல் இரகசிய வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படும் கறுப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” – என சிவஞானம் மேலும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular