Homeஉள்நாடுகொள்கலன்கள் விவகாரம்: உண்மையை வெளிப்படுத்துக!

கொள்கலன்கள் விவகாரம்: உண்மையை வெளிப்படுத்துக!

கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் உண்மை தெளிவுப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பில் வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் சுங்கத்தின் எந்தவித பரிசோதனைகளும் இல்லாமல் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டை அரசியல்வாதிகளை விடுத்து முதலில் சுங்கத் தொழிற்சங்க ஒன்றியமே முன்வைத்தது.

சுங்கப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சிரேஷ்ட சுங்க அதிகாரிகள் உட்பட சுங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். முறையான பரிசோதனை நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாது அதிக ஆபத்துள்ள கொள்கலன்கள் சில நாட்களுக்குள் அவசரமாக விடுவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கலன்களை விடுவிப்பதால் நாட்டிற்குக் சேர வேண்டிய வருவாய் இழப்பு, தடைசெய்யப்பட்ட பொருட்களை விடுவித்தமை என பிரச்சினையொன்று தானாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முன்னர் தடை விதிக்கப்பட்ட தரப்பினரின் கொள்கலன்களும் இதில் அடங்கியுள்ளன. இது குறித்து அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் எதுவும் நடக்கவில்லை. இந்த விசாரணையின் வெளிப்படைத்தன்மையில் சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பற்றவர்களாக நடந்து வர முடியாது. ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பற்றவர்களாகவும் பொறுப்புக்கூறல் இல்லாதவர்களாகவும் இருந்து வர முடியாது. சுமார் 60% கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றன.

இந்தக் கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்தமை பல கடுமையான பிரச்சிகளை கிழப்பிவிட்டுள்ளன. இது திருட்டை உருவாக்குகின்றது. ஊழல் செய்பவர்களுக்கு வழிசமைக்கப்பட்டுள்ளது. ஊழலை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கே இங்கும் வழி திறந்து கொடுக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கொள்கலனை பரிசோதனை செய்யும் உபகரணங்களுக்காக பில்லியன் கணக்கில் செலவிடப்படுகின்றன. ஆனால் இன்று 60% கொள்கலன்கள் எந்தவித பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இந்தக் கொள்கலன்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஆபத்தான பொருட்கள் இல்லை என்று எவ்வாறு கூற முடியும் ? இது பெரும் பேசுபொருளுக்கு வழிவகுத்துள்ளது.

இதில் ஆயுதங்கள் இருந்ததாகவும் பேசப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில், இதனால் தேசிய பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து காணப்படுவது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இது குறித்து வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular