Homeஉள்நாடுபொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு சிக்குன்குனியா

பொகவந்தலாவ பகுதியில் 06 பேருக்கு சிக்குன்குனியா

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் சேவையாற்றும் 06 ஊழியர்கள் சிக்குன்குனியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வார காலப்பகுதிக்குள்ளேயே இவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு இன்று புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

நோயால் பாதிக்கப்பட்ட 06 ஊழியர்களும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளால் (09) அன்று குறித்த பகுதி முழுவதும் புகை விசிறல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular