Homeஉள்நாடுசர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள கொள்கலன் விவகாரம்: சிஐடி விசாரணை!

சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள கொள்கலன் விவகாரம்: சிஐடி விசாரணை!

சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை  விடுவிக்குமாறு அரசாங்கம்  ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை.   மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர் என்று  அமைச்சர் பிமல்  ரத்நாயக்க தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

“ சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிப்பதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை.    இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தையும் தொடர்புபடுத்தி கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இவ்விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்    விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.  விசாரணைகளின் பின்னர் உண்மை வெளிவரும்.” எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மேற்படி கொள்கலன்களில் புலிகளின் ஆயுதங்களே வந்துள்ளன என்று சர்ச்சைக்குரிய கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வெளியிட்டிருந்தார். அது பற்றியும் கேள்வி எழுப்பட்டது. அர்ச்சுனாவின் இந்த கூற்று கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular