Homeஉள்நாடு161 சபைகளின் பதவிகாலம் இன்று ஆரம்பம்!

161 சபைகளின் பதவிகாலம் இன்று ஆரம்பம்!

இலங்கையில் 161 உள்ளுராட்சி சபைகளில் இன்று ஆட்சி அமைக்கப்படவுள்ளது. ஏனைய 178 உள்ளுராட்சி சபைகளுக்கு உள்ளுராட்சி ஆணையாளரின் பங்கேற்படனேயே ஆட்சி அதிகாரம் நிர்ணயிக்கப்படவுள்ளது.

சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய தேர்தல் கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்றது.

குறித்த தேர்தலில் 161 சபைகளில் ஆட்சி அமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மைய அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக்குழுக்கள் பெற்றுள்ளன. குறிப்பாக நூற்றுக்கு மேற்பட்ட சபைகளில் தேசிய மக்கள் சக்தி இன்று ஆட்சியமைக்கின்றது.
161 சபைகளுக்குரிய தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் நியமனமும் இடமபெறும்.

கொழும்பு மற்றும் யாழ்.மாநகரசபைகள் உட்பட 178 சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சி மற்றும் சுயேச்சைக்குழுக்கள் பெறவில்லை.
மேற்படி சபைகளுக்குரிய தலைவர் மற்றும் பிரதி தலைவருக்குரிய நியமனம் தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு முடிவெடுக்கப்படும்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் 266 சபைகளில் தேசிய மக்கள் வெற்றி பெற்றிருந்தாலும் 115 வரையான சபைகளிலேயே தனித்து ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.

அதேவேளை, கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றுவதற்கு ஆளும் கட்சியும், எதிரணிகளும் தீவிரம் காட்டிவருகின்றன.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியே பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular