Homeஉலகம்‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

‘நெருப்புடன் விளையாட வேண்டாம்’ – அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தாய்வான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்க்ரி-லா உரையாடலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே சீனா இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

இந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், ஆசிய வல்லரசு பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்றும் ஆசியாவின் அதிகார சமநிலையை மாற்ற இராணுவ நடவடிக்கைக்கு நம்பகத்தன்மையுடன் தயாராகி வருவதாகவும் தாய்வான் மீது படையெடுப்பதற்கான ஒத்திகைகளை சீனா முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விரைவாக கண்டனத்தை வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சு, சீனாவை கட்டுப்படுத்த தாய்வான் பிரச்சினையை ஒரு பேரம் பேசும் பொருளாகப் பயன்படுத்தலாமென அமெரிக்கா மாயைகளை வளர்த்துக் கொள்ள எண்ணலாகாது. அத்தோடு நெருப்புடன் விளையாடவும் கூடாது என்றுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அவதூறான குற்றச்சாட்டுகளால் சீனாவை இழிவுபடுத்தியுள்ளதாகவும் பனிப்போர் மனநிலையை ஊக்குவிப்பதாகவும் பீஜிங் குற்றம் சாட்டியுள்ளது.

தாய்வானை தனது பிரதேசத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் ஒன்றிணைப்பதாகவும் சீனா கூறியுள்ளது.

தாய்வான் சீனாவின் இந்த உரிமைகோரல்களை நிராகரித்து வருவதோடு தாய்வான் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்று கூறுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular