Homeஉள்நாடுமுன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு இன்று கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை தண்டனையும், முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோவுக்கு 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமால் இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கரம்போர்ட் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்தே இவ்வாறு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது சதொசவின் தலைவராக நளின் பெர்ணான்டோ பதவி வகித்தார்.

2015 ஜனாதிபதி தேர்தலின்போது சதொக ஊடாக கெரம்போட் உள்ளிட்ட விளiயாட்டு உபகரணங்களைக் கொள்வனவு செய்து விளையாட்டு கழகங்களுக்கு வழங்கியுள்ளனர். இதன்மூலம் அரசாங்கத்துக்கு 53 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular