Homeஉள்நாடுடியன்சின் தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!

டியன்சின் தோட்டத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு: விசாரணை தீவிரம்!

பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் லயன் குடியிருப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (29) காலைவேளையிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ், நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது மூக்கு பகுதியில் இரத்தக்கறை காணப்பட்டது என பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
இவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு ஹட்டன் தடயவியல் பொலிஸ் பிரிவினரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

உயிரிழப்புக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில், இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ். சதீஸ்குமார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular