Homeஉலகம்அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விலகினார் எலான் மஸ்க் !

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து விலகினார் எலான் மஸ்க் !

அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

“சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய வரி சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார்.

இனி ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் செயல்பாடு சார்ந்து மஸ்க் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular