Homeஉள்நாடுசமஷ்டி தீர்வே தமிழர்களின் எதிர்பார்ப்பு!

சமஷ்டி தீர்வே தமிழர்களின் எதிர்பார்ப்பு!

“ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும்இ இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன்இ இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய தூதுவருடன் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல்இ பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பில் இதன்போது ஆஸ்தரேலிய தூதுவரிடம் கவனத்துக்கு சிறிதரன் எம்.பி. கொண்டுவந்தார்.

அரசியல் தீர்வு பற்றியும் பேசப்பட்டுள்ளது. சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக ஆஸ்திரேலியாவின் அழுத்தங்கள் தொடரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

காணிப்பிரச்சினைஇ காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினைஇ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைஇ பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular