Homeஉலகம்கனடாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்!

கனடாவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்!

கனடா அமெரிக்காவுடன் 51ஆவது மாகாணமாக இணைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். எனினும், அதை கனடா நாட்டு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

டிரம்ப் கருத்து தொடர்பாக கனடா அரசு தரப்பிலும் கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், தன் முயற்சியை கைவிடாத டிரம்ப் தொடர்ந்து கனடாவை இணைப்பது பற்றி பேசி வருகிறார். இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பதிவில்,

“எங்களது அற்புதமான கோல்டன் டோம் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் கனடாவிடம், நீங்கள் தனி நாடாக இருக்க விரும்பினால் 61 பில்லியன் டாலர்கள் செலவாகும்.

ஆனால் நீங்கள் எங்கள் நேசத்துக்குரிய 51வது மாகாணமாக மாறினால் ஜீரோ டாலர்கள் செலவாகும் என்று நான் சொன்னேன். கனடா இன்னும் அதிகாரப்பூர்வமாக மாகாண அந்தஸ்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. ” – என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular