Homeஉள்நாடுவடக்கு மக்களின் காணிகளில் கைவைக்கமாட்டோம்!

வடக்கு மக்களின் காணிகளில் கைவைக்கமாட்டோம்!

வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது – என்று காணி அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.

வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு முற்படுகின்றது.

எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தலை தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையி லான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத் துள்ளது என்று பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு எதிராகப் போராட வைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர்.

எனவே, வடக்கு மக்கள் உண்மையை நிலைமையைப் புரிந்துகொள்ள வேண் டும். போலி வேடம் போட்டு உங்களைத் தவ றாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதி களை நம்ப வேண்டாம் என்று வடக்கு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என அமைச்சர் லால்காந்த குறிப்பிட்டுள்ளார் என்று தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular