Homeஉள்நாடுநுவரெலியாவில் பஸ் விபத்து: 23 பேர் காயம்! Upadate-

நுவரெலியாவில் பஸ் விபத்து: 23 பேர் காயம்! Upadate-

Upadate-

நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் லபுக்கலை, டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் 12 பேர் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். ஏனையோருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த சுற்றுலா பஸ்ஸொன்றே இரவு 11.15 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

குருணாகலை பகுதியில் இருந்து பதுளைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள், மீண்டும் குருணாகலை நோக்கி செல்லும் வழியிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில் 43 பேர் பயணித்துள்ளனர்.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

…………….

முதலாம் இணைப்பு

நுவரெலியா, கண்டி பிரதான வீதியில் நுவரெலியா, டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றே இரவு 11.15 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீ. தீபன்ராஜ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular