Homeஉள்நாடுஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

 

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று (23)கைதுசெய்யப்பட்டுள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.

30 வயதுடைய நாயகொடதென்ன குருத்தலாவ பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நாயகொடதென்ன குருத்தலாவ பகுதிக்கு விரைந்து சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது 2850 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போகஹகும்பர பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் (24) வெளிமடை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular