Homeஉள்நாடுகொழும்பில் என்பிபி ஆட்சியமைக்க பிரபா கணேசன் நேசக்கரம்!

கொழும்பில் என்பிபி ஆட்சியமைக்க பிரபா கணேசன் நேசக்கரம்!

பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக செயற்குழு கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

22 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் பம்பலபிட்டி தலைமை காரியாலயத்தில் இடம் பெற்றது.

இதன் போது கொழும்பு மாநகர சபையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது.

ஜனநாயக தேசிய கூட்டணிக்கு கொழும்பு மாநகர சபை உட்பட கிடைக்கப்பெற்ற பத்து ஆசனங்கள் மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் மக்கள் விரோத செயல்பாடுகளை முன்னெடுத்ததால் ஆதரவினை வாபஸ் வாங்க தயங்க மாட்டோம் என ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular