Homeஉள்நாடுகொழும்பில் எங்கள் ஆட்சி: சஜித் அணி தம்பட்டம்!

கொழும்பில் எங்கள் ஆட்சி: சஜித் அணி தம்பட்டம்!

“கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை அரசாங்கத்துக்கு வழங்கபோவதில்லை. எதிரணிகளின் ஒத்துழைப்புடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியே மலரும்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பு மாநகர சபை தொடர்பில் கட்சிகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றோம். பல கட்சிகள் எமக்கு ஆதரவு வழங்கியுள்ளன. எனவே, கொழும்பில் ஆட்சியை அரசாங்கம் இழக்கும்.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில சுயாதீனக் குழுக்கள் எம்மையும் சந்தித்துள்ளன. எனவே, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலேயே கொழும்பு மாநகரில் ஆட்சி அமையும். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரே மேயர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ஏனைய கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். உரிய வகையில் சரியான முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular