Homeஉள்நாடுஅச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: குட்டி சபைகளில் எதிரணி ஆட்சி மலரும்!

அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்: குட்டி சபைகளில் எதிரணி ஆட்சி மலரும்!

நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

” நாட்டில் தற்போது வினைதிறன் அற்ற அரச நிர்வாகமே காணப்படுகின்றது. தற்போதைய ஆட்சியாளர்கள் பேசுவதில் மிகவும் திறமையானவர்களாக இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்களிடம் பதில்களோ தீர்வுகளோ இல்லை. “- எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.

ஆளும் தரப்பினர் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கு எதிர்க்கட்சிக்கு உரிமை இல்லை என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் அதிகாரத்தை அமைக்கும் உரிமை எதிர்க்கட்சிக்கும் காணப்படுகின்றன. எனவே உப்பைக் கூட சரியாக வழங்க முடியாத அரசாங்கத்தின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அஞ்சாது எனவும் சஜித் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை காணப்படும் உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிலைநாட்டவும், ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தவும் ஜனநாயக கட்டமைப்பிற்குள் எடுக்க முடியுமான அதிகபட்ச நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் எனவும் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular