Homeஉள்நாடுகுட்டி சபைகளில் கூட்டரசு: ரணில் தலைமையில் எதிரணிகள் சங்கமம்!

குட்டி சபைகளில் கூட்டரசு: ரணில் தலைமையில் எதிரணிகள் சங்கமம்!

ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்தை பெறாத உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் பங்கேற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பிவிதுரு ஹெல உறுமய என்பவற்றின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது எதிரணிகள் ஒன்றிணைந்து குட்டி சபைகளில் ஆட்சியமைப்பதெனவும், தேசிய அரசியலின்போதும் கூட்டு எதிரணியாக செயற்படுவதெனவும் இணக்கம் காணப்பட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular