Homeஉலகம்முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஷ்யா போர்?

முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஷ்யா போர்?

போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு தரப்பிலும் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அமைதியை நோக்கி செல்வதற்கான தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார். மே 15ஆம் திகதி இது பற்றி கலந்துரையாடலாம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியின் அழைப்பை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார்.

அதேவேளை, ஆஸ்திரேலியா உக்ரைனுடன் தொடர்ந்து துணை நிற்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
‘ போர் நிறுத்தத்திற்கான அழைப்பை வரவேற்கின்றோம். ரஷ்யா திறந்த மனதுடன் செயற்பட வேண்டும்.
உக்ரைனில் ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை நோக்கிய அனைத்து அர்த்தமுள்ள நகர்வுகளையும் நாம் முழுமையாக ஆதரிக்கின்றோம்.” – எனவும் ஆஸி. பிரதமர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular