HomeBig Storyகொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!

கொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!

புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர்.

பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

கதிர்காமத்திலிருந்து கண்டி – நுவரெலியா பிரதான வீதி ஊடாக கொழும்பை நோக்கி பயணித்த இபோச பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

பஸ் வீதியை விட்டு விலக பாரிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular