Homeஉள்நாடு8 மாதங்களுக்குள் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 52 பேர் சுட்டுக்கொலை!

8 மாதங்களுக்குள் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 52 பேர் சுட்டுக்கொலை!

இலங்கையில் 2024 செப்டம்பர் 21 முதல் 2025 மே 7 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 79 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இக்காலப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதாள குழுக்களின் துப்பாக்கிக்சூடு மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பான துப்பாக்கிச்சூடு சம்பவற்றிலேயே இக்கொலைள் இடம்பெற்றுள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வின்போது சமூக கட்டமைப்பில் நாளாந்தம் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் அவர்களை உருவாக்கியவர்கள், போசித்தவர்கள் குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள். பாதாளக் குழுக்களின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” எனவும் அமைச்சர் கூறினார்.

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே துப்பாக்கிசூட்டு பிரயோகம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் இதனை காட்டிலும் பல படுகொலைகள் இடம்பெற்றன.பாதாள குழுக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் என்ற வகையில் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் முன்னெடுக்கப்படும். ” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular