Homeஉள்நாடுதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க அழைப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது என்று அந்தக் கட்சியின் பதில் தலை வரும் வடக்கு மாகாண அவைத் தலை வருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந் திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

“வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றி ஆளும் வகையில் முதல் நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இருக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சி யும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை.” எனவும் அவர் கூறினார்.

அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய் வதற்காக நாளை சனிக்கிழமை அரசியல் குழு கூடுகின்றது. எந்தெந்தச் சபைகளில் எவ்வாறு செயற்படுவது?, யார் யாரை முன்னிலைப்படுத்தி தவி சாளர், மேயரைத் தீர்மானிப்பது? பற்றிக் கலந்துரை யாடவுள்ளோம். ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பதில் பொதுச்செயலாளருடன் பேசியுள்ளார்கள்.

ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தாம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பாகச் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பாகச் செயற்பட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கின் றோம்.” – எனவும் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular