Homeஉள்நாடுமாகாண சபை தேர்தலையும் உடன் நடத்துமாறு சவால்

மாகாண சபை தேர்தலையும் உடன் நடத்துமாறு சவால்

“மாகாணசபைத் தேர்தலையும் விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.” – என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

‘ உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயம் வெல்லும். மக்கள் அதற்குரிய ஆணையை மீண்டும் வழங்குவார்கள் என உறுதியாக நம்புகின்றோம்.

அதேபோல பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள மாகாணசபைத் தேர்தலையும் முடிந்தளவு விரைவில் நடத்த எதிர்பார்க்கின்றோம்.
அதேவேளை, டிசம்பரில் ஜனாதிபதி பதவி பற்றி பேசும் எதிர்க்கட்சியினர், முதலில் அரசியலமைப்பை படிக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் கருத்தைவிட நாட்டு மக்களின் கருத்தே எமக்கு முக்கியம்.-” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular