Homeஉள்நாடுகொழும்பை ஆள சஜித் அணிக்கு ஐதேக ஆதரவு?

கொழும்பை ஆள சஜித் அணிக்கு ஐதேக ஆதரவு?

அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபரை மேயராக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வந்தால், கொழும்பு மாநகரசபையில் அக்கட்சி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவது பற்றி சாதகமாக பரிசீலிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள் கிடைக்கப்பெற்றிருந்தாலும் அக்கட்சி ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெறும்பான்மை பலத்தை பெறவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 29 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 இடங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.ஏனைய இடங்களை அரசியல் கட்சிகளும், சுயேச்சைக்குழுக்களும் பெற்றுள்ளன.

இந்நிலையில் எதிரணிகளை இணைத்துக்கொண்டு கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது. இதற்கு ஆதரவளிக்கப்படுமா என ஐதேக தரப்பிடம் எழுப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular