Homeஉள்நாடுஇதொகாவின் மக்கள் பணி தொடரும்: வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

இதொகாவின் மக்கள் பணி தொடரும்: வாக்களித்த அனைவருக்கும் நன்றி!

‘2025 உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும், வெற்றிப்பெற வாக்களித்த அன்பார்ந்த வாக்காளர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

‘ இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 55,241 வாக்குககளை பெற்று 39 உறுப்பினர் ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபையில் 02 உறுப்பினர், தலவாக்கலை-லிந்துலை நகர சபை 02 உறுப்பினர்கள், ஹட்டன்-டிக்கோயா நகர சபை 02 உறுப்பினர், நுவரெலியா பிரதேச சபை 06 உறுப்பினர், அக்கரபத்தனை பிரதேச சபை 04 உறுப்பினர், அம்பகமுவ பிரதேச சபை 02 உறுப்பினர், ஹங்குரான்கெத்த பிரதேச சபை 02 உறுப்பினர், கொட்டகலை பிரதேச சபை 05 உறுப்பினர், நோர்வூட் பிரதேச சபை 06 உறுப்பினர், கொத்தமலை பிரதேச சபை 08 உறுப்பினர்கள் என மொத்தமாக 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்டம் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில்15 உறுப்பினர் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் மாத்தளை மாவட்டத்தில் 06 உறுப்பினர்களையும், கண்டி மாவட்டத்தில் 04 உறுப்பினர்களையும், பதுளை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களையும், இரத்தினபுரி மாவட்டத்தில் 01 உறுப்பினர் ஆசனத்தையும் தன்னகர்த்தே கொண்டுள்ளது.

மொத்தமாக இ.தொ.கா சேவல் சின்னத்தில் போட்டியிட்ட மாவட்டங்களில் 54 உறுப்பினர் ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமை இ.தொ.கா விற்கு கிடைத்த மாபெறும் வெற்றியாகும்.

அதேபோல் இதொ.கா வின் மக்களுக்கான சேவை என்றும் தொடரும்.

நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு, இ.தொ.காவின் வெற்றிக்கு அயராது உழைத்த தொண்டர்கள், பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – எனவும் ஜீவன் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular