Homeஉலகம்5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவிப்பு

இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்?

இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் மூன்றும், மிக் 29 விமானம் ஒன்றும், எஸ்யு 30 போர் விமானமொன்றும் இவ்வாறு தற்பாதுகாப்பிற்காக சுட்டுவீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஆளில்லா விமானமொன்றையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இதனை உறுதி செய்துள்ளார் எனவும் மேற்படி செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இந்திய விமானங்கள் எந்த பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டன என்பதை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular