HomeBig Storyகோல் பேஸில் மேதினக் கூட்டம்: ரணில் எதிர்ப்பு!

கோல் பேஸில் மேதினக் கூட்டம்: ரணில் எதிர்ப்பு!

” கோல் பேஸை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானித்தன. அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி தற்போது மீறியுள்ளது.” – என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் தேர்தலில் போட்டியிடவில்லை.
பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதும் கிடையாது. ஓரிரு விளக்கமளிக்கும் கூட்டங்களில்தான் பங்கேற்றுவருகின்றேன். அப்படி இருந்தம் ஊர் முழுதும் என்னைதான் ஆளுங்கட்சியினர் திட்டி தீர்த்துவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுகின்றனர். இப்படியொரு தேர்தலை நான் கண்டதில்லை.

அதேபோல மே முதலாம் திகதியை நினைவுகூர வேண்டும். அரசியல் நிகழ்வுகளுக்கு கோல் பேஸை வழங்குவதில்லை என முடிவெடுத்தோம். அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கின. தற்போது மே தினத்தை கோல் பேஸில் நடத்தி அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி மீறியுள்ளது.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular