Homeஉள்நாடுடிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது அரசியல் நகைச்சுவை!

டிசம்பரில் சஜித் ஜனாதிபதியென்பது அரசியல் நகைச்சுவை!

இலங்கையில் தற்போதுள்ள எதிர்க்கட்சிகளால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அறிவித்துவருகின்றமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ நாட்டில் தற்போது உண்மையான எதிர்க்கட்சி இல்லை. அரசாங்கத்தையும் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை. அதனால்தான் இப்படியான நகைச்சுவைத்தனமான கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

நாட்டில் தற்போதுள்ள எதிரணிகளால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. புதிதாக எதிர்க்கட்சியொன்று வரவேண்டும். அக்கட்சி தேசிய மக்கள் சக்தியைவிட சிறப்பாக செயற்படவேண்டும். எம்மைவிட மக்களை அதிகம் நேசிக்க வேண்டும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular