Homeஉள்நாடுகுட்டி தேர்தல்: பதுளையில் 712,401 வாக்காளர்கள்: 576 வாக்குச் சாவடிகள்!

குட்டி தேர்தல்: பதுளையில் 712,401 வாக்காளர்கள்: 576 வாக்குச் சாவடிகள்!

2025 ஆம் ஆண்டின் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பதுளை மாவட்டத்தில் இருந்து 7 லட்சத்து 12 ஆயிரத்து 401 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் இவர்களில் 37, 671 வாக்காளர்கள் தபால் மூல வாகுகளிப்பிற்கு தகுதி பெற்றுள்ளதாக பதுளை மாவட்ட தேர்தல் காரியாலயத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் கே. காந்தீபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பதுளை மாட்டத்தில் உள்ள 276 கிராம அலுவலர் பிரிவுகளில் 576 வாக்கு சாவடிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பிற்காக தாபிக்கப்பட உள்ளன.

வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிப்பதற்காக பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் 27 நிலையங்களும் , தர்மதூத கல்லூரியில் 26 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 391 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்படும் தேர்தலில் 230 வாக்கெண்ணும் நிலையங்களும் 217 தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகளை அறிவித்தப் பின்னர் வாக்கு சாவடிகளில் உள்ள வாக்குப் பெட்டிகளை பொறுப்பேற்கும் நிலையங்களாக பதுளை மத்திய மகா வித்தியாலயம் , பதுளை தர்மதூத கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்கள் செயற்படும் என அவர் தெரிவித்தார்.

பசறை நிருபர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular