Homeஉள்நாடுஐ.நா. வெசாக் விழாவில் பங்கேற்க அநுர வியட்நாம் பயணம்!

ஐ.நா. வெசாக் விழாவில் பங்கேற்க அநுர வியட்நாம் பயணம்!

ஐ.நா. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மே முதல் வாரத்தில் வியட்நாமுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

ஐ.நா. வெசாக் தின நிகழ்வுகள் மே 6 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதிவரை மியன்மாரின் ஹோ சி மின் நகரில் நடைபெறுகின்றது.

85 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட 2 ஆயிரத்து 700 விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, கம்போடியா, நேபாளம், லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே ஐ.நா. வெசாக் தினம் அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular