Homeஉள்நாடுடான் பிரியசாத் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

டான் பிரியசாத் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

 

டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை எனவும், அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றார் எனவும் கொழும்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டான் பிரியசாத்மீது இன்று இரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்தே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே டான் பிரியசாத் உயிரிழக்கவில்லை எனவும், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார் எனக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

நபரொருவருடன் மது அருந்திகொண்டிருந்தவேளையிலேயே, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. மற்றைய நபருக்கும் சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular