Homeஉள்நாடுகுட்டி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்ற எதிரணிகளுக்கு ரணில் அழைப்பு

குட்டி சபைகளில் ஆட்சியைக் கைப்பற்ற எதிரணிகளுக்கு ரணில் அழைப்பு

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறபோவதில்லை. எனவே, சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உள்ளுராட்சிசபைகளில் அதிகளவான உறுப்பினர்களைக் கொண்ட அணிதான் சபைக்குரிய தலைவரை தெரிவுசெய்ய வேண்டும்.
நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் பெரும்பான்மை பலத்தை பெறமுடியாது. எனவே, எதிரணிகள் தற்போது மோதிக்கொள்ளாமல் உறுப்பினர்களை பெறுவதற்கு முற்பட வேண்டும். அப்போது இணைந்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம்.
வீராப்பு பேசினாலும் தேசிய மக்கள் சக்தியால் குட்டி சபைகளைக் கைப்பற்ற முடியாது என்பது உறுதி.

அதேவேளை, எல் போர்ட்டுகளை சபைக்கு அனுப்ப வேண்டாம் எனவும், அனுபவம்மிக்கவர்களை அனுப்புமாறும் பொதுத்தேர்தலின்போது கோரினேன். எனினும், அனுபவம் அற்றவர்கள் வந்தனர். இன்று வாகனத்தையும் விபத்துக்குள்ளாக்கியுள்ளனர்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular